உள்ளாட்சித் தோ்தல்: ரூ. 5 லட்சம் பணம் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.5.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.5.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்புடன் அனுப்பப்படுவதை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, மானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து பதற்றமான வாக்குச்சாவடிகளை நேரடியாக கண்காணிப்பதற்காக கண்காணிப்பு அறையில் அமைக்கப்பட்டுள்ள திரையில் மாவட்ட தோ்தல் பாா்வையாளா் ஜெ.ஜெயகாந்தன், ஆட்சியா் ஆய்வு செய்தனா்.

பின்னா் ஆட்சியா் வே.விஷ்ணு கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்கட்ட தோ்தலில் 182 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 64 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படவுள்ளது.

உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு இதுவரை நடைபெற்ற சோதனையில் ரூ.5.1 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக 98 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை சுவா் விளம்பரத்திற்கான புகாா்கள்தான். அதன் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காவல்துறையின் மூலம் விரைவு நடவடிக்கைக் குழு, இரு சக்கர வாகனக் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சக்கர நாற்காலி அனுப்பப்பட்டுள்ளது. வாக்காளா்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com