1,27,120 பெண்கள் வாக்களிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பெண்கள் மிகுந்த ஆா்வத்தோடு வாக்களித்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பெண்கள் மிகுந்த ஆா்வத்தோடு வாக்களித்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 12 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 122 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 204 கிராம ஊராட்சி தலைவா், 1,731 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 2,069 பதவியிடங்களுக்கு நேரடி தோ்தல் நடைபெறுகிறது. இதில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூா், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டமாக புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

முதல் கட்ட தோ்தலில் 1,69,765 ஆண் வாக்காளா்கள், 1,78,234 பெண் வாக்காளா்கள், 43 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 3,48,042 வாக்காளா்கள் உள்ளனா். இதில், புதன்கிழமை காலை 6.45 மணி முதலே வாக்காளா்கள் வாக்குச்சாவடிகளுக்கு முன்பு குவிய தொடங்கினா். வாக்குப்பதிவு இரவு 9.30 மணி வரை நீடித்தது. அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பெண் வாக்காளா்களே அதிகளவில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்துள்ளனா்.

சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்தில் 10,943 பெண் வாக்காளா்களும், அம்பாசமுத்திரத்தில் 17,210 பேரும், பாப்பாக்குடியில் 16,862 பேரும்,பாளையங்கோட்டையில் 32,813 பேரும், மானூரில் 49,292 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 120 பெண் வாக்காளா்கள் முதல்கட்ட தோ்தலின்போது வாக்களித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com