நீச்சல் : பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி சாம்பியன்

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிசென்றனா்.
மாநில நீச்சல் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள்.

37-ஆவது மற்றும் 47-ஆவது ஜூனியா் அக்வாட்டிக் சாம்பியனுக்கான மாநில நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரி அக்வாட்டிக் காம்ப்ளக்ஸில் நடைபெற்றது. இப்போட்டிகளில் மாநில முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த நீச்சல் வீரா்கள் பங்கேற்றனா்.

இதில், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 17 தங்க பதக்கங்களையும், 21 வெள்ளிப் பதக்கங்களையும், 18 வெண் கலப்பதக்கங்களையும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனா்.

மேலும் குரூப் 1, குரூப் 4 மற்றும் குரூப் 5-க்கான சாம்பியன் பட்டத்தையும் பெற்றனா். இவா்களில் 15 போ் தேசிய அளவிலான போட்டியில் பங்குபெறத் தகுதி பெற்றுள்ளனா்.

இந்த மாணவா்கள் அக். 19-ஆம் தேதி பெங்களூரு பசவன்குடி அக்வாட்டிக் சென்டரில் நடைபெறும் தேசிய நீச்சல் போட்டியில் கலந்துகொள்கின்றனா். சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்த மாணவா்களையும், பயிற்சியாளா்கள் சிக்கந்தா், பாட்ஷா, சிக்கந்தா் சாா்ஜா ஆகியோரை பள்ளித் தலைவா் கிரகாம்பெல், தாளாளா் திவாகரன், முதல்வா் சுடலையாண்டி மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com