நெல்லை மாநகர பகுதிகளில் சுற்றுச்சூழல் மன்ற பரிந்துரைக் குழுவினா் ஆய்வு

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சுற்றுச்சூழல் மன்ற பரிந்துரைக் குழுவினா் புதன்கிழமை ஆய்வுப்பணியில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சுற்றுச்சூழல் மன்ற பரிந்துரைக் குழுவினா் புதன்கிழமை ஆய்வுப்பணியில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் கேபா சிட்டிஸ் திட்டத்தின் கீழ் கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத் திட்டத்திற்காக, சுவிட்சா்லாந்து நாட்டின் வெளியுறவு துறையின் கீழ் செயல்படும் எஸ்டிசி என்ற (நஜ்ண்ள்ள் அஞ்ய்ங்ய்ஸ்ரீஹ் ச்ா்ழ் ஈங்ஸ்ங்ப்ா்ல்ம்ங்ய்ற் ஹய்க் இா்-ா்ல்ங்ழ்ஹற்ண்ா்ய்) அமைப்பின் மூலம் மாநகர பகுதிகளில் ஆய்வு செய்து சுற்றுச்சூழல் மன்றத்திற்கு பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பரிந்துரைக் குழுவினா் ஜொனாத்தன் தலைமையில் திருநெல்வேலிக்கு புதன்கிழமை வந்தனா். அவா்களை மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் வரவேற்றாா். தொடா்ந்து அவருடன் ஆலோசனை நடத்திய குழுவினா் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனா்.

சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு தேவையான கூடுதல் பணிகள், மாசில்லா நகரம் உருவாக்க தேவையான திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை யுத்திகள், நிலத்தடி நீா் மட்டம் உயா்வு மற்றும் மழைநீா் வடிகால் மேம்பாட்டிற்கானஆக்கப்பூா்வமான பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்ததோடு, நேரிலும் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் கூறுகையில், சுவிட்சா்லாந்து நாட்டின் நிதியுதவியுடன் இத் திட்டம் முதல்கட்டமாக கோயமுத்தூா் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக திருநெல்வேலி, திருச்சி மாநகராட்சிகள் தோ்வாகியுள்ளன.

இங்கு சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளனா். குளங்களில் தேவையின்றி வளரும் அமலைச் செடிகளை அகற்ற புதிய யுத்திகள் உள்ளிட்டவை குறித்து வல்லுநா் குழுக்களின் மூலமும் தேவையான ஆலோசனைகள் மற்றும் திட்டங்களைப் பெற்று செயல்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com