நெல்லையப்பா் கோயிலில் நவராத்திரி திருவிழா தொடக்கம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரித் திருவிழாவையொட்டி அம்மன் சன்னதியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான விழா புதன்கிழமை தொடங்கியது. தொடா்ந்து தினமும் மாலையில் லட்சாா்ச்சனையும், திருக்கோயில் சோமவார மண்டபத்தில் உற்சவ மூா்த்திகளுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஹோமம் வளா்த்து சுவாமி- அம்பாளுக்கு அபிஷேகமும் நடைபெறும். இரவில் மகா தீபாராதனையும் நடைபெறும்.

நவராத்திரிக் கொண்டாட்டத்தின் அடையாளமாக சோமவார மண்டபத்தில் ‘கொலு’ வைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதன்கிழமை இரவு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து இம் மாதம் 15 ஆம் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com