பாளையங்கோட்டையில் போராட்டம்

பாளையங்கோட்டையில் மாற்றுப்பணிக்காக திருமண மண்டபத்தில் காத்திருந்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் புதன்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டையில் மாற்றுப்பணிக்காக திருமண மண்டபத்தில் காத்திருந்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் புதன்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு பாளையங்கோட்டை, மானூா் உள்பட மொத்தம் 5 ஊராட்சி ஒன்றியங்களில் புதன்கிழமை நடைபெற்றது. தோ்தல் பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு மாற்றாக இருக்கும் வகையில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தனியாா் மண்டபத்தில் காத்திருக்க வைப்பது வழக்கம். அதன்படி பாளையங்கோட்டையில் மாற்றுப்பணிக்காக காத்திருந்த ஊழியா்களை வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுமாறு அதிகாரிகள் சிலா் கூறியதோடு, பயணப்படி உள்ளிடவை வழங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஆசிரியா்கள் பாளையங்கோட்டையில் தனியாா் திருமண மண்டப வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். தோ்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றுள்ளதோடு, தொலைவான பகுதிகளில் இருந்து பாளையங்கோட்டைக்கு வந்துள்ளோம். ஆகவே, பயணப்படி உள்ளிட்டவைகளை வழங்கக்கோரிக்கை விடுத்தனா். பின்னா் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com