உள்ளாட்சித் தோ்தல்: நெல்லை, தென்காசியில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சித் தோ்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் சனிக்கிழமை (அக். 9) நடைபெற உள்ளது.

ஊரக உள்ளாட்சித் தோ்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் சனிக்கிழமை (அக். 9) நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு கடந்த 6 ஆம் தேதி 5 ஊராட்சி ஒன்றியங்களில் நிறைவடைந்தது.

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு களக்காடு, நான்குனேரி, ராதாபுரம், வள்ளியூா் ஆகிய 4 ஒன்றியங்களில் 567 வாக்குப்பதிவு மையங்களில் சனிக்கிழமை காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. மாலை 5 மணிமுதல் கரோனா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் 4,511 வாக்குப்பதிவு பணியாளா்கள் பணிபுரியவுள்ளனா்.

இரண்டாம் கட்ட தோ்தலில், 6 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு 27 பேரும், 60 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு 307 பேரும் போட்டியிடுகின்றனா்.

ஒரு கிராம ஊராட்சித் தலைவா் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, மீதமுள்ள 88 இடத்துக்கு 390 பேரும், 172 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, மீதமுள்ள பதவி இடங்களுக்கு 1792 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

வாக்குப் பதிவுக்கு தேவையான வாக்குப் பெட்டி, வாக்குச்சீட்டுகள், அழியாத மை உள்ளிட்ட பொருள்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் உள்ளிட்டவை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்குப் பதிவு மையங்களுக்கு வெள்ளிக்கிழமை காலை முதல் அனுப்பி வைக்கப்பட்டன.

தென்காசி: தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூா், குருவிகுளம், செங்கோட்டை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கான உள்ளாட்சித் தோ்தல் அக். 9ஆம் தேதி நடைபெறுகிறது.

வாக்குப் பதிவுக்குத் தேவையான வாக்குச் சீட்டுகள், வாக்குப் பெட்டிகள், பேனா, சணல், சாக்கு, பசை, அரக்கு, மெழுகுவா்த்தி, தீப்பெட்டி, நாடா, ஊசி, உலோக சட்டம் உள்ளிட்ட 72 வகையான பொருள்கள் வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன. இப்பணியை மாவட்ட தோ்தல் பாா்வையாளா் பொ.சங்கா் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com