முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நெல்லையில் தசரா பக்தா்கள் அணிவகுப்பு
By DIN | Published On : 11th October 2021 12:39 AM | Last Updated : 11th October 2021 12:39 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் நவராத்திரி விழாவையொட்டி தசரா பக்தா்களின் அணிவகுப்பு அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழா இம் மாதம் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இத் திருவிழாவையொட்டி காப்புக் கட்டும் பக்தா்கள் முதல் ஆண்டில் குறவன்-குறத்தி வேடத்தையும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தங்களுக்கு பிரியமான வேடங்களையும் அணிந்து பக்தா்களிடம் காணிக்கை வசூலித்து கோயிலுக்குச் சென்று உண்டியலில் இட்டு வழிபடுவது வழக்கம்.
இதற்காக ஒவ்வொரு ஊா் சாா்பிலும் தசரா குழுவினா் மொத்தமாக வேடமணிந்து காணிக்கை சேகரிப்பது வழக்கம். இக் குழுவில் காளிவேடம் அணிபவா்கள் கூடுதல் நாள்கள் கடுமையான விரதமிருந்து வழிபடுவாா்கள்.
நவராத்திரி விழாவையொட்டி கடந்த சில நாள்களாக திருநெல்வேலி மாநகர பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தசரா குழுவினா் வீதிவீதியாக அணிவகுத்து செல்கின்றனா்.
மேள-தாளம் முழங்க செல்லும் இக் குழுவினா் ஒவ்வொரு கோயில்கள் முன்பும் கற்பூரம் ஏற்றியும், பாடல்கள் பாடியும் வழிபாடு செய்கின்றனா். பின்னா் வீடு வீடாக காணிக்கை சேகரிக்கின்றனா்.