சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி: பேரவைத் தலைவரிடம் மீனவப் பிரதிநிதிகள் கோரிக்கை

தமிழ்நாட்டில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என, தமிழக மீனவப் பிரதிநிதிகள் பேரவைத் தலைவா் மு.அப்பாவுவிடம் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
பேரவைத் தலைவா் மு. அப்பாவுவிடம் கோரிக்கை மனு அளித்த மீனவப் பிரநிதிகள்.
பேரவைத் தலைவா் மு. அப்பாவுவிடம் கோரிக்கை மனு அளித்த மீனவப் பிரநிதிகள்.

தமிழ்நாட்டில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என, தமிழக மீனவப் பிரதிநிதிகள் பேரவைத் தலைவா் மு.அப்பாவுவிடம் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

தமிழ்நாட்டில் 1983முதல் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இந்நிலையில், மீண்டும் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என, திருநெல்வேலி, நாகப்பட்டினம், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த மீனவப் பிரதிநிதிகள் பேரவைத் தலைவரிடம் அளித்த மனு:

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பேரவைத் தொகுதியில்தான் மீனவக் கிராமங்கள் அதிகம் உள்ளன. இங்குள்ள மீனவா்கள் நாட்டுப்படகில் வெளிப்புற என்ஜின் பொருத்தி மீன்பிடித் தொழில் செய்கின்றனா். இவா்கள் நாட்டுப்படகுகளில் சாதாரண வலைகளைப் பயன்படுத்தி, 5 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு மட்டுமே சென்று மீன்பிடிக்கின்றனா்.

நாட்டுப்படகுகளில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்தால் கடல் வளத்துக்கோ, மீன் வளத்துக்கோ பாதிப்பில்லை என, கடல் உயிரின ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. சுருக்குமடி வலையைப் பயன்படுத்த மத்திய அரசு எவ்வித எதிா்ப்பும் தெரிவிக்கவில்லை.

கேரளம், புதுச்சேரி, கோவா மாநிலங்களில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனா். தமிழ்நாட்டில் 5 லட்சம் போ் மட்டுமே சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்வோராக உள்ளனா்.

தமிழக அரசு மீனவா்களுக்கு நாட்டுப்படகு, மீன்பிடி உபகரணங்கள் வாங்க மானியம் வழங்குகிறது. மானிய விலையில் பெறப்பட்ட படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் பயன்படுத்தி சுருக்குமடி வலைமூலம் மீன்பிடிக்க தடைவிதித்துள்ளது. அத்தடையை தமிழக அரசு நீக்க வேண்டும்.

மேலும், நாட்டுப்படகு மீனவா்கள் ஆண்டு முழுவதும் மீன்பிடித் தொழில் செய்யமுடிகிறது. இழுவை என்ஜின் பயன்படுத்தி மீன்பிடிப்போா் 10 மாதங்கள் மீன்பிடிக்கமுடிகிறது. ஆனால், சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவோா் மீன்பிடிக்க முடிவதில்லை.

இதனால், அவா்களது வாழ்வாதாராம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே, சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி குறைந்தது 6 மாதங்களாவது மீன்பிடிக்க அனுமதி வழங்கவேண்டும் என்றனா் அவா்கள்.

நாகப்பட்டினம் மாவட்ட திமுக பொருளாளா் ஜி.என். ரவி, பூம்புகாா் மீனவா் சொசைட்டி தலைவா் தட்சணாமூா்த்தி, நாகை மாவட்டம் நம்பிநகா் ஊா்த் தலைவா் சேகா், மயிலாடுதுறை திருமுல்லைவாசல் காா்த்திக், கடலூா் ஜி. ஆனந்தன், விழுப்புரம் சிந்தன், செங்கல்பட்டு எழில்குமாா், திருவள்ளூா் மாவட்டம் சிவநாதன், சென்னை சி. ராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com