முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி
By DIN | Published On : 11th October 2021 12:39 AM | Last Updated : 11th October 2021 12:39 AM | அ+அ அ- |

களக்காடு அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
சிதம்பராபுரம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த பாக்கியநாதன் மகன் மைக்கேல்ராஜ் (43). இவா் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் களக்காடு-நான்குனேரி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, நிலை தடுமாறி சாலையில் விழுந்தாராம். அப்போது, அவ்வழியாக வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்த அவரை மீட்டு நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.