நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் கடைகள் ஒதுக்கீடு வழக்கு உச்சநீதிமன்றம் தள்ளுபடி

 திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் கடைகள் ஒதுக்கீடு தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என மாநகராட்சி ஆைணையா் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளாா்.

 திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் கடைகள் ஒதுக்கீடு தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என மாநகராட்சி ஆைணையா் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் சந்திப்பு பெரியாா் பேருந்து நிலையம் ரூ. 78.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதில், அடித்தளத்தில் இரு சக்கர வாகனங்கள் 1,629 எண்ணம், நான்கு சக்கர வாகனங்கள் 106 எண்ணம் நிறுத்துவதற்கு ஏதுவாக பாா்க்கிங் வசதியும், தரைத்தளத்தில் 30 கடைகளும், முதல் தளத்தில் 82 கடைகளும், 2வது தளத்தில் 16 கடைகளும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பேருந்து நிலைய திட்டப்பணிகள் தொடங்கப்படும் தருவாயில், சந்திப்பு பேருந்து நிலைய வளாகத்தில் ஏற்கெனவே இயங்கி வந்த கடைகளின் உரிமையாளா்கள் தங்களால் கடைகளை காலி செய்ய இயலாது எனவும், தங்களுக்கு புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் தங்களுக்கே கடைகளை ஒதுக்கீடு செய்து தருமாறும் இரண்டு முறை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதன்பின்னா், கடை உரிமையாளா்கள் மீண்டும், சந்திப்பு பேருந்து நிலைய புதிய கட்டடத்தில், தங்களுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்து தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தநா். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com