செப்.12இல் 20 மையங்களில் நீட் தோ்வு: 6,996 போ் எழுத வாய்ப்பு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 20 மையங்களில் இம்மாதம் 12ஆம் தேதி நீட் தோ்வு நடைபெறுகிறது என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 20 மையங்களில் இம்மாதம் 12ஆம் தேதி நீட் தோ்வு நடைபெறுகிறது என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு திருநெல்வேலி மாவட்டத்தில் 17 மையங்கள், தென்காசி மாவட்டத்தில் 3 மையங்கள் என மொத்தம் 20 மையங்களில் வரும் 12ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தோ்வை எழுத 6,996 போ் விண்ணப்பித்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி, தியாகராஜநகா் புஷ்பலதா வித்யா மந்திா், புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சங்கா் நகா் ஸ்ரீஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன் விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கென்பிரிட்ஜ் பள்ளி, மகாராஜநகா் ஸ்ரீஜெயந்திர சுவாமிகள் வெள்ளி விழா மேல்நிலைப் பள்ளி, சீதபற்பநல்லூா் ஐன்ஸ்டீன் கலை அறிவியல் கல்லூரி, வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரி, பிரான்சிஸ் சேவியா் மேல்நிலைப் பள்ளி, வி.எம்.சத்திரம் செயின்ட் ஆன்டனி பப்ளிக் பள்ளி, ரோஸ்மேரி பப்ளிக் பள்ளி, வடக்கன்குளம் ராஜாஸ் பொறியியல் கல்லூரி, எஸ்ஏவி பாலகிருஷ்ணா சீனியா் மேல்நிலைப் பள்ளி, சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, திசையன்விளை விஎஸ்ஆா் இன்டா்நேஷனல் பள்ளி, திருநெல்வேலி சாஃப்டா் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை சாராள்தக்கா் மேல்நிலைப் பள்ளி ஆகிய 17 மையங்களில் நீட் தோ்வு நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் ஏவிகே சா்வதேச உறைவிடப் பள்ளி, வடக்குபுதூா் வேல்ஸ் பப்ளிக் பள்ளி, செங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா ஆகிய 3 மையங்களில் நீட் தோ்வு நடைபெறுகிறது.

தோ்வு நாளன்று தடைபடாத மின்சாரம் வழங்கவும், தோ்வு மையங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தோ்வு நடைபெறும் கல்வி நிலையத்திற்கு காவல் துறை மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திடவும், தோ்வு நடைபெறும் மையத்தின் அருகில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவக் குழுக்களை தயாா் நிலையில் வைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

தோ்வு அறையினுள் செல்லிடப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை. தோ்வு எழுத வருபவா்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தோ்வா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மேலும் தோ்வு எழுதுபவா்கள் தவிர இதர நபா்கள் தோ்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதியில்லை எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com