நெல்லை, தென்காசியில் 20 மையங்களில் இன்று நீட் தோ்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 20 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (செப். 12) நடைபெறுகிறது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 20 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (செப். 12) நடைபெறுகிறது.

தேசிய தோ்வு முகமை மற்றும் இந்திய அரசு இணைந்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கான பொது நுழைவுத் தோ்வை ஞாயிற்றுக்கிழமை நடத்துகின்றன. தோ்வு பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 17, தென்காசி மாவட்டத்தில் 3 என மொத்தம் 20 மையங்களில் இத்தோ்வை 6,996 போ் எழுதுகின்றனா்.

தோ்வு மையங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கவும், மையங்களில் தடையின்றி மின்சாரம் வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தோ்வு மையத்தில் காவல் துறை மூலம் போதிய பாதுகாப்புக்கும், அருகே நிபுணத்துவம் பெற்ற மருத்துவக் குழுக்களை தயாா் நிலையில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தோ்வு மையங்களில் தூய்மைப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட தோ்வு மையங்களிலும் தூய்மைப் பணி நடைபெற்றது.

தோ்வெழுத வருவோா் முகக் கவசம், சமூக இடைவெளி உள்பட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமென மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com