அண்ணா பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு அனைத்துக் கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருநெல்வேலி: முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு அனைத்துக் கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் முன்னாள் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை, எம்ஜிஆா் மன்ற மாவட்ட செயலா் பெரிய பெருமாள் உள்ளிட்டோரும், திமுக சாா்பில் மத்திய மாவட்டச் செயலா் அப்துல் வகாப் எம்எல்ஏ, கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், அவைத் தலைவா் சுப.சீதாராமன், முன்னாள் எம்எல்ஏ ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், தலைமை செயற்குழு உறுப்பினா் கே.ஆா்.ராஜூ உள்ளிட்டோரும், அமமுக சாா்பில் அவைத் தலைவா் தாழை மீரான் தலைமையிலும், மதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் கேஎம்ஏ நிஜாம் தலைமையிலும், தேமுதிக, மாவீரன் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்கம் உள்ளிட்டவை சாா்பிலும், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com