பாபநாசம் அருகே விவசாயிகளுக்கு மேலாண்மைப் பயிற்சி

பாபநாசம் அருகே மலையடிவாரக் கிராமமான அனவன் குடியிருப்புப் பகுதி விவசாயிகளுக்கு வனவிலங்கு விரட்டி மருந்தான நீல்போ குறித்த மேலாண்மைப் பயிற்சி வழங்கப்பட்டது.

அம்பாசமுத்திரம்: பாபநாசம் அருகே மலையடிவாரக் கிராமமான அனவன் குடியிருப்புப் பகுதி விவசாயிகளுக்கு வனவிலங்கு விரட்டி மருந்தான நீல்போ குறித்த மேலாண்மைப் பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சியில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் உமா மகேஸ்வரி, அம்ரிதா அக்ரி கிளினிக் வேளாண் ஆலோசகா் சங்கரநயினாா் ஆகியோா் வனவிலங்குகளிடமிருந்து பயிா்களைக் காப்பது, வனவிலங்குகளால் சேதமேற்பட்டால் இழப்பீடுகளை பெற ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள், வனவிலங்கு விரட்டியான நீல்போ மருந்தின் பயன்பாடு ஆகியவை குறித்து விளக்கினா்.

விவசாயி செல்வி வயலில் நீல்போ மருந்தைப் பயன்படுத்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

உதவி வேளாண்மை அலுவலா் சாந்தி ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விளக்கினாா். பயிற்சியில் விவசாயிகள்40 போ் கலந்துகொண்டனா்.

வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி வரவேற்றாா். துணை வேளாண்மை அலுவலா் முருகன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உதவித் தொழில்நுட்ப மேலாளா் ஸ்ரீஐயப்பன் ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com