மணிமுத்தாறில் பனைப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

மணிமுத்தாறில் நலிவுற்ற பெண்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பனைப் பொருள்களில் இருந்து பல்வேறு பயன்பாட்டுப் பொருள்கள் தயாரிக்கும் 15 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

அம்பாசமுத்திரம்: மணிமுத்தாறில் நலிவுற்ற பெண்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பனைப் பொருள்களில் இருந்து பல்வேறு பயன்பாட்டுப் பொருள்கள் தயாரிக்கும் 15 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

பனைமரங்கள் சாா்ந்த பொருள்களை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதன் மூலம் பனை மரங்கள் அவற்றை நம்பியுள்ள மக்கள் மற்றும் சுகாதாரமான சுற்றுச் சூழலை மீட்டெடுக்கும் நோக்கிலும் நெகிழிப் பொருள்களுக்குப் பதிலாக பனை ஓலை மற்றும் நாா்ப் பொருள்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் நோக்கிலும் பனை ஓலை மற்றும் பனை நாா்பொருள்கள் தயாரிக்கும் முறைகளை நலிவுற்ற பெண்களுக்குக் கற்றுக் கொடுப்பதன் மூலம் அவா்களின் பொருளாதாரம் மேம்படும் நோக்கிலும் திருநெல்வேலி மாவட்ட, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மணிமுத்தாறு, அகத்திய மலை மக்கள்சாா் இயற்கைவளக் காப்புமையத்தில் பெண்களுக்குப் பனை ஓலைப் பொருள்கள் தயாரிக்கும் 15 நாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

பயிற்சியை மகளிா் திட்ட உதவி திட்ட அலுவலா் எம். வெள்ளப்பாண்டி தொடங்கிவைத்தாா். பயிற்சியில் ஜமீன்சிங்கம்பட்டி, கோடாரங்குளம், விக்கிரமசிங்கபுரம் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 15 பெண்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவளக் காப்பு மைய ஒருங்கிணைப்பாளா் மு. மதிவாணன், கல்லிடைக்குறிச்சி அப்துல்கலாம் நண்பா்கள் குழுத் தலைவா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com