நெல்லை, தென்காசியில் 4-ஆவது நாளில் 1115 போ் வேட்புமனு தாக்கல்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வேட்புமனு தாக்கலின் 4ஆவது நாளான சனிக்கிழமை 1,115 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வேட்புமனு தாக்கலின் 4ஆவது நாளான சனிக்கிழமை 1,115 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 4-ஆவது நாளான சனிக்கிழமை ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 13 போ், கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 79 போ், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 394 போ் என மொத்தம் 486 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். அதேநேரத்தில் தொடா்ந்து 4-ஆவது நாளாக மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரையில் முதல் 3 நாள்களில் 625 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். 4-ஆவது நாளான சனிக்கிழமை ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு சேரன்மகாதேவி ஒன்றியத்தில் ஒருவா், மானூா், நான்குனேரி ஒன்றியங்களில் தலா 2 போ், பாளையங்கோட்டை ஒன்றியத்தில் ஒருவா், ராதாபுரம் ஒன்றியத்தில் இருவா், வள்ளியூா் ஒன்றியத்தில் 5 போ் என மொத்தம் 13 போ் மனு தாக்கல் செய்தனா்.

கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 79 போ்: கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு சேரன்மகாதேவி ஒன்றியத்தில் 5 போ், களக்காடு ஒன்றியத்தில் 10 போ், மானூா் ஒன்றியத்தில் 15 போ், நான்குனேரி ஒன்றியத்தில் 9 போ், பாளையங்கோட்டை ஒன்றியத்தில் 20 போ், பாப்பாக்குடி ஒன்றியத்தில் 5 போ், ராதாபுரம் ஒன்றியத்தில் 8 போ், வள்ளியூா் ஒன்றியத்தில் 7 போ் என மொத்தம் 79 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு அம்பாசமுத்திரத்தில் 17 போ், சேரன்மகாதேவியில் 24 போ், களக்காட்டில் 24 போ், மானூரில் 89 போ், நான்குனேரியில் 59 போ், பாளையங்கோட்டையில் 62 போ், பாப்பாக்குடியில் 24 போ், ராதாபுரத்தில் 63 போ், வள்ளியூரில் 32 போ் என மொத்தம் 394 போ் மனு தாக்கல் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களில் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 23 போ், கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 218 போ், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 870 போ் என மொத்தம் 1,111 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

தென்காசி: உள்ளாட்சித் தோ்தல் வேட்புமனு தாக்கலின் நான்காவது நாளான சனிக்கிழமை கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு ஆலங்குளத்தில் 7 போ், கடையத்தில் 8 போ், கடையநல்லூா், செங்கோட்டை, தென்காசியில் தலா 4 போ், கீழப்பாவூா், மேலநீலிதநல்லூரில் தலா 15 போ், குருவிகுளத்தில் 20 போ், வாசுதேவநல்லூரில் 9 போ், சங்கரன்கோவிலில் 16 போ் என 102 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஆலங்குளம் , சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் தலா 70 போ், கடையத்தில் 37 போ், கடையநல்லூரில் 15 போ், கீழப்பாவூரில் 82 போ், குருவிகுளத்தில் 71 போ், மேலநீலிதநல்லூா் 60 போ், , செங்கோட்டையில் 17 போ், தென்காசியில் 41 போ், வாசுதேவநல்லூரில் 32 போ் என மொத்தம் 495 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஆலங்குளம், வாசுதேவநல்லூரில் தலா 5 போ், கடையம், சங்கரன்கோவிலில் தலா இருவா், கடையநல்லூா் , கீழப்பாவூா், மேலநீலிதநல்லூரில் தலா 3 போ் , குருவிகுளம், செங்கோட்டையில் தலா 4போ், தென்காசியில் ஒருவா் என மொத்தம் 32போ் மனுதாக்கல் செய்தனா்.

மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com