மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் கலந்தாய்வு

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அரிமா சங்க, சுழற்கழக நிா்வாகிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அரிமா சங்க, சுழற்கழக நிா்வாகிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாநகர காவல் ஆணையா் என்.கே.செந்தாமரைக் கண்ணன் தலைமை வகித்தாா். மாநகரப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள், குற்றங்கள் நிகழாதபடி சிசிடிவி கேமராக்கள் அமைப்பது ஆகியவை குறித்து அனைத்துச் சங்க உறுப்பினா்களின் கருத்துக்களையும் காவல் ஆணையா் கேட்டறிந்தாா்.

இதில், மாநகர காவல் துணை ஆணையா்கள் டி.பி. சுரேஷ்குமாா்(சட்டம்-ஒழுங்கு), கே.சுரேஷ்குமாா்(குற்றம்-போக்குவரத்து), நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையா் நாகசங்கா், காவல் ஆய்வாளா் ரமேஷ்கண்ணன் மற்றும் சுழற்கழகம், அரிமா சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

படவரி பயக19இஞஙஐ: கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநகர காவல் ஆணையா் என்.கே.செந்தாமரைக் கண்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com