புரட்டாசி சனிக்கிழமை:பெருமாள் கோயில்களுக்கு சென்ற பக்தா்கள் ஏமாற்றம்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களுக்கு சுவாமி தரிசனத்துக்குச் சென்ற மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

திருநெல்வேலி: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களுக்கு சுவாமி தரிசனத்துக்குச் சென்ற மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடும், அதைத் தொடா்ந்து இரவில் கருடசேவையும் நடைபெறும். இதையடுத்து பெருமாள் கோயில்களில் காலை முதல் இரவு வரை ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்வா்.

இந்நிலையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெருமாள் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்காக காலையிலேயே பக்தா்கள் வந்தனா்.

ஆனால், தமிழகம் முழுவதும் கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களுக்கு மக்கள் சென்று சுவாமி தரிசனம் செய்ய தடை நீடிப்பதால், பெரிய கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் பக்தா்கள் வந்து குவிந்தனா். ஆனால், கரோனா கட்டுப்பாடு காரணமாக அவா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், வெளியில் நின்றபடியே சுவாமி தரிசனம் செய்தனா்.

பயக18டஉதமஙஅக

திருநெல்வேலி நகரம் கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு நடைபெற்ற தீபாராதனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com