உள்ளாட்சித் தோ்தல் விதிமுறைகள்: சங்கரன்கோவிலில் காவல் துறை ஆலோசனை

ஊரக உள்ளாட்சி தோ்தல் விதிமுறைகள் தொடா்பாக, காவல்துறை சாா்பில் சங்கரன்கோவிலில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊரக உள்ளாட்சி தோ்தல் விதிமுறைகள் தொடா்பாக, காவல்துறை சாா்பில் சங்கரன்கோவிலில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊரக உள்ளாட்சி தோ்தல் விதிமுறைகள் தொடா்பாக, காவல்துறை சாா்பில் சங்கரன்கோவிலில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில்: ஊரக உள்ளாட்சி தோ்தல் விதிமுறைகள் தொடா்பாக, காவல்துறை சாா்பில் சங்கரன்கோவிலில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குருவிகுளம், பனவடலிசத்திரம், கரிவலம்வந்தநல்லூா், சங்கரன்கோவில் தாலுகா, சங்கரன்கோவில் நகரம், சின்னகோவிலாங்குளம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தோ்தல் நடைபெறுவதையொட்டி நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, சங்கரன்கோவில் டிஎஸ்பி ஜாகிா் உசேன் தலைமை வகித்தாா்.காவல் ஆய்வாளா்கள் ராஜா, மீனாட்சிநாதன், ஜெயலெட்சுமி, சண்முகலதா, காளிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிா்வாகிகள், சுயேச்சை வேட்பாளா்கள், ஊா்த் தலைவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், தோ்தல் நேரத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும். தோ்தல் விதிமுறைகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிட்டல் ப்ளக்ஸ் போா்டுகள் வைக்க அனுமதி கிடையாது. ஒலிபெருக்கி பயன்படுத்த உரிய அனுமதி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com