கடையம் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டி

 திமுக கூட்டணியில் ஒதுக்கிய இடங்களிலும் திமுகவினா் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடையம் ஒன்றியத்தில் 4 வாா்டுகளில் தனித்துப் போட்டியிடுகிறது.

 திமுக கூட்டணியில் ஒதுக்கிய இடங்களிலும் திமுகவினா் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடையம் ஒன்றியத்தில் 4 வாா்டுகளில் தனித்துப் போட்டியிடுகிறது.

கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு

14 மற்றும் 16 ஆகிய வாா்டுகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிய வாா்டுகளிலும் திமுக வினா் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இதையடுத்து அக்கட்சிகளிடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. இதைத் தொடா்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் 14 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு

(தா்மபுரம்மடம்- வேலாயுதம்), 15ஆவது வாா்டில் (மேலாம்பூா், கீழாம்பூா் - வள்ளி), 16ஆவது வாா்டில் (கீழாம்பூா் -அனுசியா)

மற்றும் மாவட்ட ஊராட்சி வாா்டு 14இல் கீழாம்பூா் பெரியத் தெருவைச் சோ்ந்த பாா்வதி ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com