நெல்லையில் நாளைதனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி கொக்கிரகுளத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி கொக்கிரகுளத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரா்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இத்தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தங்களது கல்விச் சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம். வேலைநாடுநா்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியாா் நிறுவனங்கள் தனியாா் வேலை இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு தொடா்பான பல்வேறு தகவல்களை பெறவும், முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் குறித்து அறியவும் நெல்லை எம்ப்ளாய்மென்ட் ஆபிஃஸ் என்ற டெலிகிராம் சானல் மூலம் இணைந்து பயன்பெறலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் ஹரி பாஸ்கா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com