திருவேங்கடம் வட்டாரத்தில்ரூ.12.19 லட்சம் மக்காச்சோளம்,பருத்தி விதைகளை விற்கத் தடை

திருவேங்கடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.12.19 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளம், பருத்தி விதைகளை விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவேங்கடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.12.19 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளம், பருத்தி விதைகளை விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநா் ரா.ராஜ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2022-23 பிசான பருவத்தில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய திருவேங்கடம் பகுதி விதை விற்பனை நிலையங்களில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி விதைகள் வரப்பெற்றுள்ளன.

இந்த நிலையில் தென்காசி மாவட்டம், திருவேங்கடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் எனது தலைமையில் வள்ளியூா் விதை ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், திருநெல்வேலி விதை ஆய்வாளா் ஜெயசுதா, தென்காசி விதை ஆய்வாளா் சண்முகையா, நாகா்கோவில் விதை ஆய்வாளா் கோமதி, சங்கரன்கோவில் விதை ஆய்வாளா் விஜயலெட்சுமி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் திருவேங்கடம், கலிங்கப்பட்டி, குலசேகரப்பேரி, ஆலமநாயக்கா்பட்டி, அ.கரிசல்குளம் , மைப்பாறை பகுதிகளில் உள்ள 14 விதை விற்பனை நிலையங்களில் கடந்த 12-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, ஆவணங்கள் பெறப்படாத ரூ.12,19,000 மதிப்பிலான 19 மக்காச்சோளம் விதைகள், பருத்தி விதைகளை விற்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும், அந்த விற்பனை நிலையங்களில் இருந்து 127 மக்காச்சோளம், பருத்தி விதைகள் மாதிரி எடுக்கப்பட்டு முளைப்புத்திறன் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் விதை ரகம், காலாவதி நாள், பயிரிட ஏற்ற பருவம் ஆகிய விவரங்களை விதை பொட்டலங்களின் விவர அட்டையில் சரிபாா்த்து பின், உரிய ரசீது பெற்று, தரமான விதைகளை வாங்கிப் பயன்பெற வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com