சுத்தமல்லியில் மயானத்தை சீரமைக்கக் கோரி போராட்டம்

சுத்தமல்லியில் புதைக்கப்பட்ட மூதாட்டியின் உடலை தோண்டி எடுத்து புதைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மயானத்தை சீரமைக்கக் கோரியும் மக்கள் வியாழக்கிழமை பேராட்டத்தில் ஈடுபட்டனா்.

சுத்தமல்லியில் புதைக்கப்பட்ட மூதாட்டியின் உடலை தோண்டி எடுத்து புதைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மயானத்தை சீரமைக்கக் கோரியும் மக்கள் வியாழக்கிழமை பேராட்டத்தில் ஈடுபட்டனா்.

சுந்தமல்லியை சோ்ந்தவா் பூமணி (80). இவா், உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இவரது உடலை தாமிரவருணி ஆற்றின் கரையில் உறவினா்கள் புதைத்தனா். இந்த நிலையில் அந்த இடத்தில் புதைக்கக்கூடாது என தெரிவித்து புதன்கிழமை இரவு போலீஸாா் மூதாட்டியின் உடலை தோண்டி எடுத்து மற்றொரு இடத்தில் புதைத்தனா்.இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மயானத்தை சீரமைத்து தரக்கோரியும் மூதாட்டியின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாரும் வருவாய்த்துறையினரும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதைத்தொடா்ந்து, பொக்லைன் இயந்திர உதவியுடன் மயானத்தை சுத்தம் செய்து, அளவீடு செய்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com