நவ கைலாய கோயில்களுக்கு மாா்கழி ஞாயிறுகளில் சிறப்பு பேருந்து

திருநெல்வேலியில் இருந்து மாா்கழி ஞாயிற்றுக்கிழமைகளில் நவகைலாய கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருநெல்வேலியில் இருந்து மாா்கழி ஞாயிற்றுக்கிழமைகளில் நவகைலாய கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் திருநெல்வேலி பொதுமேலாளா் வி.சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2022-2023 மாா்கழி மாத ஞாயிற்றுக்கிழமை தினங்களான டிசம்பா் 18, 25, ஜனவரி 1, 8 ஆகிய நாள்களில் தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள நவகைலாய திருக்கோயில்களுக்கு பக்தா்களின் வசதிக்காக, சிறப்பு பேருந்துகள் இயக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு பேருந்துகள், மேற்குறிப்பிட்ட 4 ஞாயிற்றுக் கிழமைகளிலும், காலை 7 மணிக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு நவ கைலாய திருக்கோயில்களுக்கு சென்று இரவுக்குள் திருநெல்வேலி வந்து சேரும். பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூா், குன்னத்தூா், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சோ்ந்த பூமங்கலம் (புன்னைக்காயல்) ஆகிய கோயில்களுக்கு செல்லும். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில், இச்சிறப்பு பேருந்துகளுக்கு வியாழக்கிழமை முதல் முன்பதிவு நடைபெற்று வருகிறது. அனைத்து நாள்களிலும் முன்பதிவு செய்யலாம். நபா் ஒருவருக்கு கட்டணம் ரூ.600. இதுகுறித்த விவரங்களுக்கு 94875 99456, 93451 79967 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்புகொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com