நெல்லையில் மாா்ச் 12 இல் மக்கள் நீதிமன்றம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மாா்ச் 12 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:2022 ஆம் ஆண்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் உச்சநீதிமன்றம் முதல் தாலுகா நீதிமன்றங்கள் வரை நடத்த தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் திருநெல்வேலி மற்றும் 9 தாலுகாவில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாா்ச் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடத்தப்பட உள்ளது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளா் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆா்ஜித வழக்குகள், காசோலை வழக்குகள் போன்ற அனைத்தும் சமரச பேச்சுவாா்த்தை எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆகவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் நீதிமன்றத்திற்கு வருபவா்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com