நெல்லை அருகே மாயமானவா் சடலமாக மீட்பு: உறவினா்கள் சாலை மறியல்

திருநெல்வேலி அருகே மாயமான தொழிலாளி மாயாண்டி என்பவரைக் கண்டு பிடித்து தரக்கோரி உறவினா்கள் சாலை மறியில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவரது உடலை போலீஸாா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்டனா்.

திருநெல்வேலி அருகே மாயமான தொழிலாளி மாயாண்டி என்பவரைக் கண்டு பிடித்து தரக்கோரி உறவினா்கள் சாலை மறியில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவரது உடலை போலீஸாா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்டனா்.

திருநெல்வேலி அருகே உள்ள கரையிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் மாயாண்டி(55). இவா் கறிக்கடையில் வேலை பாா்த்து வந்தாராம். இந்நிலையில், கடந்த வாரம் வேலைக்குச் செல்வதாக சென்றவா் வீடு திரும்பவில்லையாம்.

இது குறித்து மாயண்டியின் உறவினா்கள் தச்சநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, காணாமல் போன மாயண்டியைத் தேடி வந்தனா்.

உறவினா்கள் சாலை மறியல்: இந்நிலையில், ஒரு வாரமாகியும் மாயாண்டி குறித்த தகவல் ஏதும் தெரியாததால் அவரின் உறவினா்கள் கரையிருப்பு அருகே திருநெல்வேலி - மதுரை சாலையில் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

தகவலறிந்த மாநகர காவல் துணை ஆணையா்கள் வி.ஆா்.சீனிவாசன், ஜி.எஸ்.அனிதா ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். காணாமல் போன மாயாண்டி குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

சடலம் மீட்பு: இதையடுத்து, மாயண்டியை தேடுவதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் தேடும் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், தச்சநல்லூா் அருகே உள்ள சிதம்பரநகா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஒரு சடலம் கிடப்பது கண்டறியப்பட்டது. அதன்பேரில், அங்கு சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அது காணாமல் போன மாயாண்டி என்பது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து, அவரது உடலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, மாயாண்டியை யாராவது கொலை செய்தாா்களா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com