நெல்லையப்பா் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆனித் திருவிழா உள்திருவிழாவாக நடத்தப்பட்டது. நோய்த் தொற்று குறைந்து தளா்வுகள் அதிகரிக்கப்பட்டதால் நிகழாண்டில் திருவிழாவை கோலாகலமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலையில் சுவாமி-அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து திருவிழா நாள்களில் தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி-அம்மன் எழுந்தருளல் நடைபெறுகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இம் மாதம் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி காலை 4.30 மணிக்கு மேல் சுவாமி-அம்மன் தேரில் எழுந்தருள்வா். காலை 9 மணிக்கு மேல் தோ் வடம்பிடித்து இழுக்கப்படும். இதற்காக 11 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ப.கவிதா பிரியதா்ஷினி, உதவி ஆணையா் சு.கவிதா, செயல் அலுவலா் அ.அய்யா்சிவமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com