செப்பறை அழகியகூத்தா் கோயில் தேரோட்டம்

திருநெல்வேலி செப்பறை அழகியகூத்தா் திருக்கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி செப்பறை அழகியகூத்தா் திருக்கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியை அடுத்த ராஜவல்லிபுரத்தில் உள்ள செப்பறை அருள்மிகு அழகியகூத்தா் திருக்கோயிலில் ஆனித் திருவிழா கடந்த ஜூன் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து திருவிழா நாள்களில் நாள்தோறும் காலையும், மாலையும் சிறப்பு வழிபாடு, சுவாமி வீதியுலா நடைபெற்றது.

கடந்த 2 ஆம் தேதி அழகியகூத்தருக்கு சிவப்பு சாத்தியும், 3 ஆம் தேதி பச்சை சாத்தியும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆனித்திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நமச்சிவாய முழக்கத்துடன் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். விழாவில் தாழையூத்து, சங்கா்நகா், நாரணம்மாள்புரம், கீழநத்தம், திருவண்ணாதபுரம் பொட்டல், அருகன்குளம், பாலாமடை சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

விழாவின் சிகர நிகழ்வாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) முற்பகல் 11 மணிக்கு மகா அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு நடன தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு அலங்கார தீபாராதனை, அழகியகூத் தா் தாமிர சபைக்கு எழுந்தருளல் நடைபெறும். ஏற்பாடு களை கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com