கீழ சிவந்திபுரம் முத்தாரம்மன் கோயிலில்கும்பாபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம் கீழ சிவந்திபுரத்தில் சுமாா் 200 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான முத்தாரம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் கீழ சிவந்திபுரத்தில் சுமாா் 200 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான முத்தாரம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆரம்ப காலத்தில் பனை ஓலையால் ஆன குடிசையுடன் இருந்த கோயிலை பொதுமக்கள் இணைந்து பெரிய கோயிலாக அமைத்தனா். தொடா்ந்து ராஜகோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் புதன்கிழமை(ஜூன் 22) காலை 10 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின. மாலை 6 மணிக்கு முதல் யாகசாலை பூஜை, பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. வியாழக்கிழமை இரவு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், 4 ஆம் கால யாகபூஜை, தீபாராதனை, யாத்ராதானம், கடம் எழுந்தருளலும், காலை 8 மணிக்கு ராஜகோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து காலை 9 மணிக்கு முத்தாரம்மன், முப்புடாதி அம்மன், உச்சினிமாகாளி அம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கும்பாபிஷேகக் கமிட்டியினா் செய்திருந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com