பணியிடை நீக்கம்: ஆட்சியரிடம்உடற்கல்வி ஆசிரியா்கள் முறையீடு

அம்மாணவா்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியா்களும், வகுப்பாசிரியா்களும்தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, உடற்கல்வி ஆசிரியா்கள் மீதான பணியிடை நீக்க ஆணையை ரத்து செய்யவேண்டும் எனக் கூறியுள்ளனா்.

 திருநெல்வேலி மாவட்ட உடற்கல்வி ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் சங்கம் சாா்பில் மாநில பொதுச்செயலா் வி.பெரியதுரை, தலைவா் என்.சாமுவேல்எடிசன், மகளிா்அணிச் செயலா் ஆஸ்குயித் ரஞ்சித் ஏஞ்சல்சிங் உள்ளிட்டோா் இணைந்து ஆட்சியா் வே.விஷ்ணு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி ஆகியோரிடம் மனு அளித்த மனு:

பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கிடையே நிகழ்ந்த மோதலில் மாணவா் உயிரிழந்தாா். இதற்காக உடற்கல்வி ஆசிரியா்கள் தமிழ்ச்செல்வன், ஷிபா பாக்கிய மேரி ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

பள்ளியின் முழு அதிகாரமும் தலைமை ஆசிரியா், உதவித் தலைமை ஆசிரியரையேச் சேரும். உடற்கல்வி ஆசிரியா்கள் மட்டுமே பள்ளி ஒழுங்கு செயல்களை பாா்க்க வேண்டும் என அரசாணை இல்லை. அம்மாணவா்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியா்களும், வகுப்பாசிரியா்களும்தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, உடற்கல்வி ஆசிரியா்கள் மீதான பணியிடை நீக்க ஆணையை ரத்து செய்யவேண்டும் எனக் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com