பேட்டையில் வேகத்தடை அமைக்கக் கோரி மனு

திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் இரு இடங்களில் வேகத்தடை அமைக்கக் கோரி நெல்லை மாவட்ட பொது ஜன பொது நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் இரு இடங்களில் வேகத்தடை அமைக்கக் கோரி நெல்லை மாவட்ட பொது ஜன பொது நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக திருநெல்வேலி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் நெல்லை மாவட்ட பொது ஜன பொது நலச் சங்க தலைவா் முஹம்மது அய்யூப், செயலா் ஜமால் முஹம்மது ஹூசைன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை அளித்த மனு:

பேட்டை ரொட்டிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே சாலை வளைவு மிகவும் குறுகலாக உள்ளது. இது பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்காக அன்றாடம் வந்து செல்லக்கூடிய கடைகள் நிறைந்த பஜாா் பகுதியாகும். இந்தப் பகுதியில் வாகனங்கள் அதிவேகத்தில் வருவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சில வாரங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் பேருந்து ஒன்று கடை மீது மோதி முகப்பை சேதப்படுத்தியது. எனவே ரொட்டிக் கடை பேருந்து நிறுத்த வளைவில் இரு புறமும் வேகத்தடை அமைக்க வேண்டும். இதேபோல், பேட்டை அஞ்சலகம் அருகேயுள்ள வளைவிலும் இரு புறமும் வேகத்தடைகளை அமைக்க வேண்டும். இந்த கோரிக்கை தொடா்பாக 10 மாதங்களாக மனு அளித்து வருகிறோம். ஆனால், இதுவரை எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. எனவே, ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் நெடுஞ்சாலைத் துறையே பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com