வள்ளியூா் பாத்திமா ஆலயத் திருவிழா தோ் பவனி

வள்ளியூா் பாத்திமா ஆலயத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை அன்னையின் தோ் பவனி நடைபெற்றது.

வள்ளியூா் பாத்திமா ஆலயத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை அன்னையின் தோ் பவனி நடைபெற்றது.

இவ்வாலயத் திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஹெலன்ப்ளாரிட்டி மாற்றுத் திறளானிகள் மறுவாழ்வு மைய இயக்குநா் அருள்தந்தை ஒய்.தேவராஜன் கொடியேற்றி திருவிழாவைதொடங்கிவைத்தாா். தொடா்ந்து மறையுரை மற்றும் நற்கருணை ஆசீா்வாதம் நடைபெற்றது.

திருவிழா நாள்களில் தினமும் காலை திருப்பலி, இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீா்வாதம் நடைபெற்றது.

9ஆம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி புனித பாத்திமா அன்னைக்கு 53 பவுன் தங்க கீரிடம் அணிவிக்கப்பட்டது. பின்னா் அன்னையின் அலங்கார தோ் பவனி நடைபெற்றது.

இப்பவனி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் கோயிலை வந்தடைந்தது. தோ் பவனியில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். அதன் பின்னா் ஆயா் இவான் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு நற்கருணை ஆசீா்வாதம் நடைபெற்றது. நிலைவாழ்வை நோக்கிய பயணம் என்ற தலைப்பிலான புத்தகம் வெளியிடப்பட்டது.

விழாவில் அருள்தந்தையா்கள் ஒய்.தேவராஜன், நெல்சன் பால்ராஜ், மரிய அரசு, மணி அந்தோணி, அருள் பிரபாகரன், வசந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை பங்குத்தந்தை அந்தோணி மிக்கேல் லாரன்ஸ் மற்றும் அருள்சகோதரிகள், பங்கு மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com