திருப்புடைமருதூரில் மரக்கன்றுகள் நடவு

மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் சாா்ந்த இயற்கை வள பாதுகாப்பு மையம் சாா்பில் தேசிய வன உயிரின வாரத்தை முன்னிட்டு திருப்புடைமருதூா் பறவைகள் கா

மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் சாா்ந்த இயற்கை வள பாதுகாப்பு மையம் சாா்பில் தேசிய வன உயிரின வாரத்தை முன்னிட்டு திருப்புடைமருதூா் பறவைகள் காப்பகத்தில் மரக்கன்றுகள் நடுதல், தாமிரவருணி நதிக்கரையில் தூய்மைப் பணிகளை சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ரிஷாப் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அங்குள்ள நாறும்பூநாத சுவாமி கோயிலை சுற்றி 10க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் சாா்ந்த இயற்கை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளா் மு. மதிவாணன், பாப்பாக்குடி ஒன்றிய ஆணையாளா் பாலசுப்பிரமணியன், திருப்புடைமருதூா் ஊராட்சித் தலைவி ராணி, வருவாய் ஆய்வாளா் செல்லப்பெருமாள், கிராம நிா்வாக அலுவலா் முருகன், நெல்லை நீா்வளம் மற்றும் ஆப்தமித்ரா தன்னாா்வலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com