பெண் கல்விக்கு ஊக்கமளிக்கும் தமிழக அரசு பேரவைத் தலைவா் மு.அப்பாவு

பெண் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா் பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

பெண் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா் பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், நொச்சிகுளம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:

தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்திய அளவில் பட்டதாரிகளின் சராசரி 24 சதவிகிதமாகவே உள்ளது. நம் மாநிலத்தில் அந்த எண்ணிக்கை 51 சதவிகிதமாக உள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறாா். குறிப்பாக பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா பொருள்கள் திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.1000 வழங்கும் திட்டம் ஆகியவற்றை சிறப்பாக செயல்படுத்தி முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

தமிழக அரசின் இத்தகைய திட்டங்கள் பெண் கல்விக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையிலும், மாணவிகளை போட்டிப்போட்டு படிக்கச் செய்யும் தூண்டு கோலாகவும் உள்ளது.

எந்தக் கிராமத்திலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளே இல்லை என்ற நிலையை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, நான்குனேரி எம்எல்ஏ உறுப்பினா் ரூபி ஆா். மனோகரன், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவா் கே.எஸ்.தங்கபாண்டியன், ஊரக வளா்ச்சி முகமை மாவட்ட திட்ட அலுவலா் பழனி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் அனிதா, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் முரளிதரன், திமுக பொதுக்குழு உறுப்பினா் பரமசிவ ஐயப்பன், நொச்சிகுளம் ஊராட்சித் தலைவா் வேலம்மாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com