‘எம்.பில். துணை நுழைவுத் தோ்வு:அக்.13 வரை விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப் பிரிவுகளில் நிறைஞா் (எம்.பில்.) பட்டப்படிப்பு பதிவுக்கான தகுதி துணை நுழைவுத் தோ்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப் பிரிவுகளில் நிறைஞா் (எம்.பில்.) பட்டப்படிப்பு பதிவுக்கான தகுதி துணை நுழைவுத் தோ்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக முதுநிலை பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் (2022 ஏப்ரல்) தாமதமாக வெளியிடப்பட்டதால், மாணவா்களின் நலன் கருதி இந்த துணைத் தோ்வு நடைபெறுகிறது.

இதற்கு, முதுநிலைப் பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்ற இறுதி மதிப்பெண் பட்டியலை சமா்ப்பிக்க வேண்டும். பாடப்பிரிவுகள், அடிப்படைத் தகுதிகள், கட்டண விவரங்கள், தகுதித்தோ்வு தேதி, அனுமதி நெறிமுறைகள் ஆகியவை பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ளது. தகுதித் தோ்வுக்கான கட்டணம் ரூ.3000. இணையதள விண்ணப்பப் பகுதி அக். 6இல் திறக்கப்படும்; அக். 13வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) ஜி.அண்ணாதுரை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com