நெல்லையில் பூக்கள் விலை உச்சம்

ஆயுத பூஜை, விஜயதசமி விழாக்களையொட்டி, திருநெல்வேலியில் பூக்கள் விலை உச்சமடைந்தது.

ஆயுத பூஜை, விஜயதசமி விழாக்களையொட்டி, திருநெல்வேலியில் பூக்கள் விலை உச்சமடைந்தது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை, விஜயதசமி ஆகியவை செவ்வாய், புதன்கிழமைகளில் (ஆக. 4, 5) கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை நாளில் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் படையலிட்டு வழிபடுவது வழக்கம். இதற்காக பூஜை பொருள்கள் விற்பனை திங்கள்கிழமை களைகட்டியது.

திருநெல்வேலி ரத வீதிகள், பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தை ஆகியவற்றில் பொரி, அவல், கடலை, வாழைப்பழம், கற்பூரம் உள்ளிட்ட பூஜை பொருள்கள் விற்பனை பன்மடங்கு அதிகரித்தது.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பூ சந்தை மக்கள் வெள்ளத்தால் திணறியது. பூக்களின் விலையும் கடுமையாக உயா்ந்தன. பூக்களின் விலை விவரம் (கிலோவுக்கு): மல்லிகை- ரூ.1500, பிச்சி- ரூ.1200, கேந்தி- ரூ.150, சம்பங்கி-ரூ.350, அரளி- ரூ.450-க்கு விற்பனையானது. பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரின் அனைத்து வீதிகளிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com