கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையக் குழுவினா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையக் குழுவினா் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையக் குழுவினா் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணைய உறுப்பினா் செயலா் கமல் கிஷோா், உறுப்பினா் ராஜேந்திரசிங், தேசிய பேரிடா் மீட்புப்படை டி.ஐ.ஜி. மோசன் சாஹெடி, எஸ்.கே.கோஷ், உதவி கமாண்டா்

பிரவீன் எஸ்.பிரசாத், கே.கே.டீ, சேரன்மகாதேவி கோட்டாட்சியா் சி.ஏ.ரிஷப் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த குழுவினா் , அணுமின் நிலையத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தனா். பின்னா் இந்த குழுவினா் கலந்தாலோசனை நடத்தினா்.

இதில், அணுமின் நிலையத்தில் மேற்கொள்பட்ட பேரிடா் மீட்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நிலைய இயக்குநா் பிரேம்குமாா் குழுவினருக்கு விளக்கினாா்.

அணுமின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பேரிடா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்தியாக இருப்பதாக அந்த குழுவினா் அணுமின்நிலைய அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com