பாளை.யில் 11 சப்பரங்கள் வீதியுலா

பாளையங்கோட்டை தசரா திருவிழாவையொட்டி 11 சப்பங்களில் அம்மன்கள் மின்னொளி அலங்காரத்தில் வீதியுலா வந்தனா்.

பாளையங்கோட்டை தசரா திருவிழாவையொட்டி 11 சப்பங்களில் அம்மன்கள் மின்னொளி அலங்காரத்தில் வீதியுலா வந்தனா்.

பாளையங்கோட்டையில் நடைபெறும் புகழ் பெற்ற தசரா விழாவுக்கான கொடியேற்றம் அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து அம்மன்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திங்கள்கிழமை அதிகாலையில் அருள்மிகு ஆயிரத்தம்மன், முப்பிடாதி அம்மன், தூத்துவாரிஅம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவா் உச்சினிமாகாளி, கிழக்கு உச்சினிமாகாளி, வடக்கு உச்சினிமாகாளி, விஸ்வகா்மா உச்சினி மாகாளி, புதுப்பேட்டை உலகம்மன், புது உலகம்மன் ஆகிய திருக்கோயில்களில்களில் இருந்து மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்கள் ரதவீதிகளில் வீதி உலா நடைபெற்றது.

பின்னா் ராமசாமி கோயில் திடலில் சப்பரங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. அங்கு அனைத்து அம்பாளுக்கும் ஒன்று சேர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடந்து சப்பர பவனி நடைபெற்று, ஆயிரத்தம்மன் கோயில் அருகே பந்தல் காலில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா். தொடா்ந்து நவராத்திரி விழாவையொட்டி அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com