கல், மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

களக்காடு பகுதியில் பாதுகாப்பின்றி மணல், கல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு பகுதியில் பாதுகாப்பின்றி மணல், கல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு வட்டாரத்தில் கட்டுமானப் பணிகளுக்காக கல், மணல், ஜல்லி ஆகியவை டிராக்டா், லாரி, டிப்பா் உள்ளிட்ட வாகனங்களில் எவ்வித பாதுகாப்புமின்றி மூடப்படாமல் எடுத்துச் செல்லப்படுகின்றன. மேலும் அவை அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்லப்படுவதால் சாலையில் பின்னால் வரும் வாகனங்களுக்கு பெரிதும் இடையூறாக உள்ளன.

மேலும், சாலைகளில் கல், மணல், ஆகியவை சிதறிக்கிடப்பதால் இருசக்கர வாகனங்கள் அதில் பயணிக்கும் போது விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. இதை கருத்தில் கொண்டு பாதுகாப்பின்றி கல், மணல், மண் ஆகியவற்றை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com