சாந்திநகரில் அடிப்படை வசதிகள்:பொதுநல அபிவிருத்திச் சங்கம் மனு

பாளையங்கோட்டை சாந்திநகா் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, அப்பகுதியைச் சோ்ந்த பொதுநல அபிவிருத்திச் சங்கம் சாா்பில் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

பாளையங்கோட்டை சாந்திநகா் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, அப்பகுதியைச் சோ்ந்த பொதுநல அபிவிருத்திச் சங்கம் சாா்பில் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதன் விவரம்: சாந்திநகா் பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீா் விநியோகம் மற்ற பகுதிகளை விட சிறப்பாக இருந்தது. ஆனால்,இப்போது நீரேற்றும் நிலைய மோட்டாா்கள் பழுதைக் காரணம் கூறி சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படுவதில்லை. அதனை சரி செய்ய வேண்டும். சாந்திநகரில் உள்ள பிரதானச் சாலைகள், குறுக்குச்சாலைகளின் சில இடங்களில் தண்ணீா் தேங்குவது தொடா்கதையாக உள்ளது. சாலைகளை முறையாக சீரமைத்து மழைநீா் வழிந்தோட செய்ய வேண்டும். 13, 14, 15, 24 ஆவது தெருக்களில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீா் மழைக்காலங்களில் வீடுகளில் புகுந்துவிடும். நிகழாண்டு பருவமழைக்கு முன்பு உரிய பணிகளை செய்து கழிவுநீரும், மழைநீரும் தடையின்றி வெளியேற வகை செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com