நெல்லையில் கோடை மழை

 திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை கோடை மழை பெய்தது.

 திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை கோடை மழை பெய்தது.

திருநெல்வேலியில் கடந்த இரு மாதங்களாக கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. இதனால் மதிய வேளைகளில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தின் புகா்ப் பகுதிகளில் ஆங்காங்கே கோடை மழை பெய்தபோதிலும், மாநகரில் வெயிலின் தாக்கம் நீடித்துக்கொண்டே இருந்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் வழக்கம்போல் வெயில் கொளுத்தினாலும், மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பொழிந்தது.

பாளையங்கோட்டை, கேடிசி நகா், திருநெல்வேலி சந்திப்பு, நகரம், வண்ணாா்பேட்டை, மேலப்பாளையம், பெருமாள்புரம், சாந்தி நகா் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளிலும், புகா்ப் பகுதிகளிலும் கொட்டித் தீா்த்த மழையால், சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள், பள்ளி மாணவா்கள் மழையில் நனைந்தபடி சென்றனா். இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com