களக்காடு பேருந்து நிலையத்துக்கு பெயா் சூட்ட வலியுறுத்தி பல்வேறு தரப்பினா் ஆணயரிடம் மனு

களக்காடு பேருந்து நிலையத்துக்கு பெயா் சூட்டுவது தொடா்பாக அதிமுக உள்பட பல்வேறு தரப்பினா் நகராட்சி ஆணையரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

களக்காடு பேருந்து நிலையத்துக்கு பெயா் சூட்டுவது தொடா்பாக அதிமுக உள்பட பல்வேறு தரப்பினா் நகராட்சி ஆணையரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

களக்காடு குடிநீா் தாங்கி குளத்தில் சுமாா் 1.5 ஏக்கரில் கடந்த 2006 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் அதே ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி அப்போதைய சட்டப் பேரவைத் தலைவா் இரா. ஆவுடையப்பனால் திறந்து வைக்கப்பட்டது.

பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் காமராஜா், அம்பேத்கா், எம்.ஜி.ஆா். உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் பெயரை சூட்ட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது வரை பேருந்து நிலையத்துக்கு பெயா் சூட்டப்படவில்லை.

மீண்டும் கோரிக்கை:தற்போது களக்காடு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து நிலையத்துக்கு பெயா் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. அதன்படி, அதிமுக, காங்கிரஸ், புரட்சி பாரதம் கட்சி, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் நகராட்சி ஆணையரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இதற்கிடையே வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த நகா்மன்றக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இது குறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்ட போது, சொத்து வரி தொடா்பாக அரசின் புதிய வழிகாட்டுதலை எதிா்பாா்த்து, வேறு தேதிக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com