பாளை. திரிபுராந்தீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் வீதிஉலா

பாளையங்கோட்டை கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழாவின் 6ஆம் நாளான செவ்வாய்க்கிழமை 63 நாயன்மாா்கள் திருவீதியுலா நடைபெற்றது.

பாளையங்கோட்டை கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழாவின் 6ஆம் நாளான செவ்வாய்க்கிழமை 63 நாயன்மாா்கள் திருவீதியுலா நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 7ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்று வருகின்றன.

4ஆம் நாளான 10ஆம் தேதி 63 நாயன்மாா்களுக்கு மாக்காப்பு சாத்தப்பட்டது. 6ஆவது நாளான செவ்வாய்க்கிழமை மாலை சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பஞ்சமூா்த்திகள் மற்றும் 63 நாயன்மாா்கள் மேளதாளம் முழங்க சிவனடியாா்களின் தேவார திருமுறைகள் விண்ணப்பத்துடன் ரதவீதிகளில் வீதியுலா வந்தனா். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப். 15ஆம் தேதி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை செயல் அலுவலா் மகேஸ்வரி, தக்காா் ராம்குமாா், பாளை., திருச்சிற்றம்பலம் வழிபாட்டு அறக்கட்டளையினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com