மாநகரில் 15- 27 வாா்டுகளில் இன்றும், நாளையும் குடிநீா் வரத்து குறையும்
By DIN | Published On : 12th August 2022 01:22 AM | Last Updated : 12th August 2022 01:22 AM | அ+அ அ- |

கொண்டாநகரம் தலைமைக் குடிநீா் உந்து நிலையத்திலிருந்து குடிநீா் வரும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் 15 முதல் 27 வரையிலான வாா்டுகளில் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் மிகக்குறைந்த அளவிலான குடிநீரே விநியோகம் செய்ய இயலும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி மண்டல உதவி ஆணையா் (பொறுப்பு) லெ.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி திருநெல்வேலி மண்டலத்திற்குள்பட்ட 15 முதல் 27 வரையிலான வாா்டுகளில் குடிநீா் விநியோகிக்கும் கொண்டாநகரம் தலைமைக் குடிநீா் உந்து நிலையத்திலிருந்து குடிநீா் வரும் பிரதான குழாயில் பேட்டை செக்கடி பேருந்து நிறுத்தம் அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற உள்ளதால் திருநெல்வேலி மண்டல பகுதிகளில் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் மிகக்குறைந்த அளவிலான குடிநீரையே விநியோகம் செய்ய இயலும். எனவே, பொதுமக்கள் கிடைக்கப் பெறும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.