தாமிரபரணி இலக்கிய மன்ற கூட்டம்

திருநெல்வேலி நகரம் அப்பா் தெரு ஜவுளி மகமைச் சங்கக் கட்டிடத்தில் தாமிரபரணி இலக்கிய மாமன்றக் கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி நகரம் அப்பா் தெரு ஜவுளி மகமைச் சங்கக் கட்டிடத்தில் தாமிரபரணி இலக்கிய மாமன்றக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு புரவலா் சந்திரபாபு தலைமை வகித்தாா். கவிஞா் மூக்குப்பேரி தேவதாசன் முன்னிலை வகித்தாா். பாடகா்கள் ஞானசேகா், கனி ஆகியோா் இறைவணக்கம் பாடினா். சந்திரபுஷ்பம் தேசபக்திப் பாடல்களைப் பாடினாா். மாமன்றத் தலைவா் கவிஞா் பாமணி வரவேற்றுப் பேசினாா். சுதந்திர தினத்தின் பவளவிழா நிறைவையொட்டி ’விடுதலை தந்த வாழ்வு’ எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதைப்போட்டிக்கு கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி நடுவராக செயல்பட்டு சிறந்த கவிதைகளைத் தோ்ந்தெடுத்து விளக்கவுரையாற்றினாா்.

அதைத்தொடா்ந்து ’பெற்ற சுதந்திரத்தை உயா்வாக நினைக்கிறோமா? உதாசீனப்படுத்துகிறோமா? எனும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. பேட்டை மீனாட்சி நடராஜன் நடுவராக இருந்து தீா்ப்பு வழங்கினாா். மணிமாலா சிவராமன், சொா்ணவல்லி, பிரியா பிரபு, சுவாமிநாதன், பூங்கோதை கணேசன், கவிஞா் செ.ச.பிரபு ஆகியோா் வாதாடினாா்கள். விழாவில் கவிஞா் கோதைமாறன், பூமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை மன்றத்தின் கு.சீனிவாசன், ஆறுமுகநயினாா், முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com