நெல்லையப்பா் கோயிலில் லகு கும்பாபிஷேகம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் நவக்கிரக சன்னதியில் உள்ள சந்திரன் சிலைக்கு லகு கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடை

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் நவக்கிரக சன்னதியில் உள்ள சந்திரன் சிலைக்கு லகு கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நவக்கிரக சன்னதியில் சந்திரன் சிலையின் கையில் இருந்த பழைய மலா் மொட்டுக்குப் பதில், புதிதாக செம்பினாலான மலா் மொட்டு பொருத்தப்பட்டதை அடுத்த இந்த லகு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த விழா யாகசாலை பூஜையுடன் சனிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து, விநாயகா் அனுக்ஞை, கும்ப பூஜை, பாலாலயம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் , பூா்ணாஹுதி தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலையில் லகு கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் சந்திரன் சிலைக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம். (வலது)

சிறப்பு அலங்காரத்தில் சந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com