மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

கரோனா பரவலால் மூடப்பட்டிருந்த மணிமுத்தாறு அருவி, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் உ

கரோனா பரவலால் மூடப்பட்டிருந்த மணிமுத்தாறு அருவி, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குள்பட்ட மணிமுத்தாறு அருவியில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. மேலும், ஜன.2020இல் பெய்த மழையால் சேதமடைந்த அருவிக் கரையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்ட வனத்துறையினா், இரண்டு ஆண்டுகளுக்குப் பின், ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கினா்.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் இருந்தும் குடும்பத்துடன் அருவிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.எனினும், வன விலங்குகள் நடமாட்டம் காரணமாக, மணிமுத்தாறு வனச் சோதனைச் சாவடியில் இருந்து அருவிக்கு காா் மற்றும் வேன்களில் செல்வோா் மட்டும் அனுமதிக்கப்பட்டதால் இருசக்கர வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com