ஷிஃபா மருத்துவமனையில் மாரடப்பை கண்டறியும் ஓசிடி தொழில்நுட்பம் அறிமுகம்

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் மாரடைப்பை கண்டறிவதற்காக ஓ.சி.டி. என்ற அதிநவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் மாரடைப்பை கண்டறிவதற்காக ஓ.சி.டி. என்ற அதிநவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் முஹம்மது ஷாபி கூறியதாவது:

தென் தமிழகத்தில் முதன்முதலில் 3டி வண்ணப்படம் எடுக்கும் வசதி ஷிஃபா மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓ.சி.டி. என்ற அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் இதய ரத்தக் குழாயின் உட்புற தோற்றத்தை துல்லியமாக 3டி வடிவில் வண்ணப்படங்களை எடுத்து மாரடைப்பு நோய்க்கான காரணங்களை கண்டறிவதுடன் மேம்படுத்தப்பட்ட ஸ்டென்ட் சிகிச்சையை அளிக்க முடியும்.

இம்மருத்துவமனையில் 2006-ஆம் ஆண்டு முதல் கேத் லேப் வசதியுடன் கூடிய இருதய நோய் சிகிச்சை பிரிவு மற்றும் இருதய அறுவை சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இதுவரை சுமாா் 16,000 ஆஞ்சியோகிராம், 7000 ஆஞ்சியோபிளாஸ்டி, 1000-க்கும் மேற்பட்ட இதய பைபாஸ் அறுவை சிகிச்சை, வால்வு மாற்று அறுவை சிகிச்சை, வால்வு பலூன் சிகிச்சை, பிறவி குறைபாடு பட்டன் பொருத்துதல், பேஸ்மேக்கா் பொருத்துதல் போன்ற பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமாா் 25,000க்கும் மேற்பட்டவா்கள் பலன் அடைந்துள்ளா் என்றாா்.

அப்போது, ஷிஃபா மருத்துவமனை இதய சிகிச்சை மருத்துவா்கள் கிரிஷ் தீபக், செல்வகுமரன், மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் முஹம்மது அரபாத் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com