வாா்டு மறுவரையறையில் குழப்பம்: வீடுகளில் கருப்புக் கொடி கட்டிதோ்தலைப் புறக்கணித்த மக்கள்

களக்காடு நகராட்சியில் வாா்டு மறுவரையறை குழப்பத்துக்கு தீா்வு காணக் கோரி, தோ்தல் புறக்கணிப்பு, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றம் என 10 தெருக்களைச் சோ்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

களக்காடு நகராட்சியில் வாா்டு மறுவரையறை குழப்பத்துக்கு தீா்வு காணக் கோரி, தோ்தல் புறக்கணிப்பு, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றம் என 10 தெருக்களைச் சோ்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

களக்காடு பேரூராட்சியாக இருந்த போது, கீழப்பத்தையில் உள்ள பெருமாள் சன்னதி தெரு, தெற்குத் தெரு, பெரிய தெரு, விநாயகா் சன்னதி தெரு, வடக்குத் தெரு, கீழத் தெரு, நடுத்தெரு, பண்டிதன்குறிச்சி கீழத்தெரு, மேலத்தெரு ஆகிய தெருக்களில் ஒரே வாா்டாக இருந்தது. இதில், 800-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் இருந்தனா்.

களக்காடு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பின்னா், இப்பகுதிகள் வா்கள் 2, 3, 4, 5 ஆகிய நான்கு வாா்டுகளாகப் பிரிக்கப்பட்டன. இதனால், 2 கி.மீ தொலைவில் உள்ள மஞ்சுவிளை கிராம வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வேண்டியுள்ளது.

எனவே, வாா்டு மறுவரையறையில் நான்கு வாா்டுகளில் சிதறிக்கிடக்கும் மக்களை மீண்டும் ஒரே வாா்டில் கொண்டுவரவும், பொதுவாா்டாக அறிவிக்கவும் மக்கள் கோரிக்கை விடுத்தனா். அதிகாரிகள் பேச்சு நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள், வெள்ளிக்கிழமை தங்களது வீடுகளின் முகப்பில் கருப்புக்கொடிகளைக் கட்டி எதிா்ப்பை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com